சிங்கப்பூர் - மலேசியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் அபிவிருத்தி - ஆளுநர் ஜீவன்
சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த தீட்டமிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
அண்மையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சென்ற வடமாகாண ஆளுநர் அங்குள்ள துறைசார் அமைச்சர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடி நிலையில் ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, வடமாகாணத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் உதவுவதற்கு தயாராக இருக்கின்ற நிலையில் அதன் அடுத்தகட்ட நடிவக்கைகளை எடுத்துள்ளோம்.
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளை மேற்கொள்ளபவர்களுக்கும் புலமைப் பரிசில்களை பெற்றுக் கொடுப்பதற்கு வடமாகாணத்துடன் இணைந்து சிங்கப்பூர் பல்கலைக்கழகம் செயற்பட உள்ளது.
மேலும் மலேசியா சுற்றுலாதுறை அனுபவங்களை கொண்டு வடமாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு முதலீட்டாளர்களை அழைப்பது தொடர்பிலும் முதற்கட்ட சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.