யாழ்.மந்திகை ஆதார வைத்தியசாலை - சாவகச்சோி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்கள் நியமனம்..
யாழ்.பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி யாழினி மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மந்திகை ஆதார வைத்திய சாலையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அண்மையில் மாகாண உள்ளக கணக்காய்வுத் திணைக்களத்தால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த வைத்திய சாலைக்கு தகுதியான வைத்திய அத்தியட்சகர் இல்லாத நிலையில் தற்போது தற்காலிக அத்தியட்சகராக யாழினி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு
மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பணியாற்றிய வைத்தியர் குமாரவேள் நியமிக்கப்பட்டுள்ளார்.