தளபதியுடன் ராஷ்மிகா எடுத்த செல்பி!!

ஆசிரியர் - Editor II
தளபதியுடன் ராஷ்மிகா எடுத்த செல்பி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தளபதி விஜய்யுடன் 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகும் 'வாரிசு' படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷ்யாம், யோகி பாபு என ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதாராபாத்தில் நடைபெற்று வருகிறது.

படத்தின் முதல் பாடல் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அப்டேட் கொடுத்திருந்தார். இடையில் படத்தின் பாடல் காட்சிகள், படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என கூப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு