கணவன் பெண்ணாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி!! -திருமணமாகி 8 வருடங்களின் பின் நடந்த அதிர்ச்சி-

ஆசிரியர் - Editor II
கணவன் பெண்ணாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி!! -திருமணமாகி 8 வருடங்களின் பின் நடந்த அதிர்ச்சி-

திருமணம் நடந்து எட்டு வருடங்கள் கழிந்த பின்னர், தனது கணவன் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்து உள்ளார்.

இந்தியாவின் குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண்ணின் முதல் கணவர் 2011 ஆம் ஆண்டு வீதி விபத்தில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த பெண் திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடினார். 

அப்போது விராஜ் வர்தன் என்பவரை சந்தித்தார். 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றனர்.

இருப்பினும் விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்கவில்லை பல நாட்கள் சாக்குப்போக்குகளை கூறிக்கொண்டே இருந்தார். அந்த பெண் அவரை வற்புறுத்தியபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷியாவில் இருந்தபோது அவர் சந்தித்த ஒரு விபத்து காரணமாக தன்னால் உடலுறவு கொள்ள முடியாததாக என்று அவர் கூறினார். மேலும் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் சரியாகிவிடும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணிடம் கூறினார்.

ஜனவரி 2020 இல், அவர் தனது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாகக் கூறினார். இதை தொடர்ந்து கொல்கத்தா சென்றார்.

ஆனால் விராஜ் வர்தன் உண்மையில் ஒரு பெண் அவர் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்காகவும் பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்வதற்காகவும் கொல்கத்தா சென்று உள்ளார். இதனை அந்த பெண் பின்னர் தெரிந்து கொண்டார்.

இதை தொடர்ந்து அந்த பெண் கோத்ரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். தனது கணவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதாகவும் இதைப் பற்றி யாரிடமாவது பேசினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தன்னை மிரட்டியதாகவும் அவர் முறைப்பாடு செய்தார். 

இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து குற்றவாளி வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டதாக கோத்ரி பொலிஸார் தெரிவித்தனர். 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு