6 தமிழ் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதிக்கு கடிதம்! வடக்கிழக்கில் இடம்பெறும் பல முக்கியமான பிரச்சினைகள் கடிதத்தில் சுட்டிக்காட்டு..
வடகிழக்கு மாகாணங்களில் உள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தி 6 தமிழ் கட்சிகள் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளன.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம், குச்சவெளியை அனுராதபுரத்துடன் இணைப்பதற்கான முயற்சி, திருக்கோணேஸ்வர ஆலய நில அபகரிப்பு போன்ற விடையங்கள் அதில் பிரதானமாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக திலீப் லியனகே நியமிக்கப்பட்டமை மற்றும் வடக்கில் தகுதியான அதிகாரிகள் இருக்கும் நிலையில் சேவை மூப்பு குறைந்த ஒருவரை நியமித்தமை.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை நியமித்தபோது வடமாகாண ஆளுநர் தன்னுடன் கலந்துரையாடவில்லை என தெரிவித்தமை மாகாண சுகாதார நியதிச் சட்டங்களை மீறுவதோடு 13வது திருத்தம் நடைமுறையில் உள்ள நிலையில்
முதலமைச்சர் ஒருவர் இல்லாதபோது ஆளுநரின் சம்மதம் பெறப்படாமை. போன்ற விடயங்களும், தமிழ் பிரதேசமான திருகோணமலை குச்ச வெளிப் பகுதியை அனுராதபுரத்துடன் இணைத்து
புதிய பிரதேச செயலக பிரிவு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சி. மற்றும் திருக்கோணேச்சர ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளை தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை.
போன்றன விரிவான விடயங்களுடன் மேற்படி கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிக்கார விடுதலை முன்னணியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்
தனித்தனியாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவ்வாறான நிலையில் குறித்த ஆவணத்தில் ஈழ மக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசிய கட்சியின் சார்பில் சிவாஜிலிங்கம் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் விரைவில் குறித்த ஆவணம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவுள்ளது.