மகாராணி உடல் அருகே பாதுகாப்பில் இருந்த காவலர் திடீர் மயக்கம்!! -லண்டனில் பரபரப்பு-
லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த பிரிட்டன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்காட்லாந்தில் உயிரிழந்த ராணியின் உடல், அரச வழக்கப்படி பல இடங்களில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராணி நீண்ட காலமாக வாழ்ந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
பின் இறுதிப் பயணமாக அரண்மனையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அடங்கிய சவப்பெட்டியை 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
இலட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று ராணி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராணி எலிசபெத்தின் சவப்பெட்டிக்கு அருகில் கண்காணிப்பில் இருந்த காவலர் மேடையில் இருந்து திடீரென மயங்கி விழுந்தார்.
இதனைக்கண்டு அஞ்சலிக்காக வந்திருந்த அனைரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அருகில் இருந்த காவலர்கள் அவருக்கு உதவினர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.