SuperTopAds

எங்கள் இதயங்கள் நொருங்கிவிட்டது!! -துயருடன் வெளிவந்த பிரிட்டனின் நாளேடுகள்-

ஆசிரியர் - Editor II
எங்கள் இதயங்கள் நொருங்கிவிட்டது!! -துயருடன் வெளிவந்த பிரிட்டனின் நாளேடுகள்-

எலிசபெத் மகாராணியின் பிரிவுச்செய்தியுடன் பிரிட்டனின் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. குறிப்பாக 1953 இல் மகாராணியின் பதவியேற்பு நிகழ்வு படத்துடன் வெளியாகியுள்ள டைம்ஸ்  சேவை வாழ்க்கை என குறிப்பிட்டுள்ளது.

எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன என (இளவரசி எலிசபெத்தின் 1952 ம் ஆண்டு படத்துடன்) டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.

எங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கான வார்த்தைகளை நாங்கள் எப்படி கண்டுபிடிப்பது என டெய்லி மெயிலின் பத்தி எழுத்தாளர் சாரா வைன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கள் துயரம் துக்கம் என்பது நூறு வித்தியாசமான உணர்வுகளை கொண்டது அவற்றை புரிந்துகொள்வது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அன்பிற்கு நாங்கள் செலுத்தும் விலை துயரம் என செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் பிரிட்டிஸ் மகாராணி தெரிவித்தை வார்த்தைகளுடன் டெய்லி டெலிகிராவ் வெளியாகியுள்ளது.

தனது இரங்கல் செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி இந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ளார். மிரர் நன்றி என்ற வார்த்தைகளுடன் வெளியாகியுள்ளது. சன் நாங்கள் உங்களை நேசித்தோம் என தெரிவித்துள்ளது.

டெய்லி எக்ஸ்பிரஸ் எங்கள் நேசத்திற்குரிய மகாராணி காலமாகிவிட்டார் என தெரிவித்துள்ளது. டெய்லி ஸ்டார் நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள் என தெரிவித்துள்ளது.