ரஷ்யா ஆக்கிரமித்த 1,000 சதுர கி.மீ. பகுதிகளை மீளக் கைப்பற்றிய உக்ரைன் படைகள்!!
ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட 1,000 சதுர கி.மீ நிலப்பரப்பை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக டசின் கணக்கான குடியேற்றங்களை மீண்டும் கைப்பற்றியதாகவும் வழங்கமான மாலை நேர உரையில் கருத்து வெளியிட்ட உக்ரேனிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
உக்ரேனிய வீரர்கள் முக்கிய கிழக்கு நகரமான பாலக்லீயாவை இறுதியாகக் கைப்பற்றியதாககவும் அவர் கூறினார். ரஷ்ய படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து கணிசமான பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுள்ளது இந்தப் போரின் போக்கை மாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.