SuperTopAds

பிள்ளையான், வியாழேந்திரன், சுரேன் ராகவன் உள்ளிட்டோருக்கும் இராஜாங்க அமைச்சு! புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு..

ஆசிரியர் - Editor I
பிள்ளையான், வியாழேந்திரன், சுரேன் ராகவன் உள்ளிட்டோருக்கும் இராஜாங்க அமைச்சு! புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்பு..

இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல கட்சிகளிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன போதிலும், எதிர்க்கட்சி அதற்கு இணக்கம் தெரிவிக்க மறுத்து வருகின்றன. 

இவ்வாறு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான செயற்பாடுகள் இழுபறியில் உள்ள நிலையில் இன்று 08 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 37 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி , தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றன.

எனவே சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது சாத்தியமற்றதாயின் இதுவரை தமது ஒத்துழைப்பினை அறிவித்துள்ள தரப்பினரை இணைத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதற்கமைய  ஜனாதிபதி செயலகத்தில் குறித்த 37 இராஜாங்க அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

ஜானக வக்கும்புர மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி, ஷெஹான் சேமசிங்க நிதி இராஜாங்க அமைச்சர்களாக  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா விவசாயம், தேனுக விதான கமகே பொருளாதார மேம்பாடு, வீட்டுவசதி இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு, ரோஹண திஸாநாயக்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அருந்திக பெர்னாண்டோ நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, விஜித பேருகொட பிரிவெனா இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

லொஹான் ரத்வத்தே பெருந்தோட்டம், தாரக பாலசூரிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்திக அனுருத்த மின்சக்தி மற்றும் வலுசக்தி, சனத் நிஷாந்த நீர்ப்பாசனம் இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சிறிபால கம்லத் பெருந்தெருக்கள், ஷாந்த பண்டார ஊடகம், அநுராத ஜயரத்ன நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வியாழேந்திரன் வர்த்தகம், சிசிர ஜயக்கொடி உள்நாட்டு வர்த்தக இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பியல் நிஷாந்த டிசில்வா மீன்பிடித்துறை, பிரசன்ன ரணவீர சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

டி.வி.சானக வனஜீவராசிகள் மற்றும் வனவளம், டி.பி.ஹேரத் கால்நடை இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சஷீந்திர ராஜபக்ஷ நீர்பாசனம் மற்றும் வடிகாலமைப்பு, சீதா அரம்பேபொல சுகாதாரம் இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

காதர் மஸ்தான் கிராமிய பொருளாதாரம்,  அஷோக பிரியந்த உள்நாட்டலுவல்கள், அரவிந்த குமார் கல்வி இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம், சுரேன் ராகவன் உயர் கல்வி, டயானா கமகே சுற்றுலா இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிராமிய வீதி அபிவிருத்தி, சாமர சம்பத் தசநாயக்க ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அனுப பியும் பஸ்குவல் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.