SuperTopAds

பொலிஸாருடன் இணைந்து கல்முனையில் மருத்துவ முகாம் நடவடிக்கை

ஆசிரியர் - Editor III
பொலிஸாருடன் இணைந்து கல்முனையில் மருத்துவ முகாம் நடவடிக்கை

கல்முனை தெற்கு  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி  ஏ. ஆர். எம் அஸ்மி வழிகாட்டலில்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கான மருத்துவ முகாம்   இன்று முன்னெடுக்கப்பட்டது.

இச்செயற்திட்டமானது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர் தலைமையில்  கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி மருத்துவ முகாமில்  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் பிரிவு,  சுற்றுச்சூழல் பொலிஸ் பிரிவு போக்குவரத்து பிரிவு,  சிறு குற்றத்தடுப்பு பிரிவு ,பெருங் குற்றத்தடுப்பு பிரிவு , சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவு  ,என்பன பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு    செப்டம்பர் மாதம் 3 ஆந் திகதி முதல் 10 ஆம் திகதி வரை   நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்ற நிலையில்    

இம் மருத்துவ முகாமானது பொலிஸாருக்கு போசாக்கான அறிவை மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதுடன்  உடல் நிறை குறியீட்டு(BMI)  என்பன பரிசோதனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.