தூத்துகுடி படுகொலையை கண்டித்து யாழில் பாரிய போராட்டம்..
தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் மீது நடத் தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து யாழி ல் இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மாலை 3 மணிக்கு தமிழ்தேசிய மக்கள் மு ண்னணியின் ஒழுங்கமைப்பில் இந்த போ ராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம், தூத்துக்குடியில் சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட் (Vedanta Sterlite) நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
குறிப்பாகஇப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ஜனநாயக வழியிலான போராட்டத்தை துப்பாக்கி முனையில் நசுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்காக இந்த போராட்டம் நடத்தப்பட்டது.