மரணத்தில் முடிந்த செல்பி மோகம்..! 24 வயதான இளைஞன் பரிதாபகரமாக மரணம்..

ஆசிரியர் - Editor I
மரணத்தில் முடிந்த செல்பி மோகம்..! 24 வயதான இளைஞன் பரிதாபகரமாக மரணம்..

செல்பி எடுப்பதற்காக நீர் வீழ்ச்சியின் அருகில் சென்றிருந்த இளைஞன் கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பண்டாரவளை ஹல்துமுல்ல - சன்வெளி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் வெலமிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞர் நேற்றுமுன்தினம் (02) மாலை வேளையில் நீர்வீழ்ச்சியை பார்வையிடுதவதற்காக 

நண்பர்கள் இருவருடன் சென்றிருந்த நிலையில், Selfie எடுப்பதற்கு முற்பட்ட வேளையில் நீர்வீழ்ச்சியிலேயே தவறி வீழ்ந்துள்ளார். இவர்களில் ஒருவர், Selfie எடுப்பதற்கு முற்பட்ட வேளையில் கால் வழுக்கி நீர்வீழ்ச்சியிலேயே வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, பிரதேச மக்களும் பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் பள்ளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு