கற்பழிக்கப் போவதாக பாலியல் அச்சுறுத்தல்!! -நடிகை பரபரப்பு தகவல்-
தமிழ் சினிமாத்துறையில் வானம், ஜில் ஜங் ஜக் ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்த ஜாஸ்மின் பாசின் தனக்கு பாலியல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்:- 'நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்தபின் பல கஷ்டங்களை சந்தித்தேன். பலர் என்னை பற்றி அவதூறாக பேசினார்கள்.
மோசமான வார்த்தைகளால் விமர்சித்தனர். மேலும் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. கற்பழித்து விடுவதாக சிலரிடம் இருந்து பாலியல் மிரட்டல்களும் வந்தன.
இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, அதில் இருந்து விடுபட முடியாமல் தவித்தேன். வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற்றேன். குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். என்னை நேசிப்பவர்களிடம் அன்பு காட்டுவேன், என்மீது வெறுப்பு காட்டினால் அது அவர்களின் விருப்பம் என்றார்.