விண்வெளியில் நெற்செய்கை!! -சீனா விஞ்ஞானிகள் அசத்தல் சாதனை-
விண்வெளி நிலைய ஆய்வகத்தில் நெற்பயிரை வளர்த்து, சீனா விஞ்ஞானிகள் அசத்தல் சாதணையை படைத்துள்ளனர்.
விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், சீன விண்வெளி நிலையத்தின், ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஆரம்பித்த இதற்கான பணிகளில், இரு வகை நெற்பயிர் விதைகளை அவர்கள் பயன்படுத்தினர்.
இதில், நெற்பயிர் 30 செ.மீ உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என அறிவதற்காக, சீன விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதிக கதிரியக்கங்கள், புவியீர்ப்பு விசையற்ற நிலை போன்ற சுற்றுச்சூழலில், விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது, விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக கருதப்படுகிறது.