இமயமலையை பைக்கில் சுற்றும் தல!!
அண்மையில் அஜித் அங்கு நீண்ட தூர பைக் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக பாலைவனத்தில் அவர் மேற்கொண்ட பயணம் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இமயமலையில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானத்தில் லடாக்கிற்கு சென்ற அஜித், அங்கு தனது நண்பர்களுடன் இணைந்து இமயமலை சாலையில் பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 4 நாட்கள் வரை அவர் இமயமலையை சுற்றி வருகிறார்.
இந்த பயணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அஜித் ஓட்டும் பைக்கில் நெவர் எவர் கிவ் அப் என்று எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.