SuperTopAds

குக் வித் கோமாளி புகழுக்கு திருமணம்!!

ஆசிரியர் - Editor II
குக் வித் கோமாளி புகழுக்கு திருமணம்!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழின் திருமாணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புகழ் தற்போது பெரியத்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அஜித்துடன் வலிமை, சந்தானத்துடன் சபாபதி, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். 

மேலும் தற்போது மிஸ்டர் சூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் புகழ் தனது காதலி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். அப்போது நானும் பென்சியும் 5 வருடமாக காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும். இந்த வருடம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என புகழ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புகழ் - பென்சியின் திருமண திகதி தற்போது வெளியாகி உள்ளது. இவர்களின் திருமணம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சம்ந்தப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.