தலையில் பெரிய கட்டியுடன் பிறந்த ஆண் குழந்தை!! -வீதியில் வீசி சென்ற தாய்-
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஜனகாம மண்டலம், ரகுநாதபுரம் பஸ் நிலையம் அருகே காஞ்சன பாடசாலைக்கு செல்லும் வீதியோரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, அவ் வழியாக சென்ற பெண்ணொருவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தலையில் பெரிய கட்டியுடன் அழுது கொண்டு இருந்தது. இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அங்குள்ள அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து குழந்தையை பரிசோதனை செய்து தலையில் உள்ளது என்ன வகையான கட்டி, அதை உடனடியாக அகற்ற முடியுமா என வைத்தியர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையை அனாதையாக வீதியோரம் வீசி சென்ற தாய் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.