உலக பணக்காரர்கள் பட்டியல்!! -மூன்றாவது இடத்தை பிடித்தார் அதானி-
உலக பணக்காரர்கள் பட்டியில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ள அதே வேளை அப்பட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார் அதானி பிடித்துள்ளார்.
இந்திய தொழில் அதிபரான கவுதம் அதானியின் தற்போதைய சொத்து 137.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை.
அதானி குழுமம் துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், சுரங்கம் மற்றும் வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது.
உலக பணக்காரர்கள் தரவரிசையில் அமெரிக்காவின் எலோன் மஸ்க் 251 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 153 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 2 ஆவது இடத்தில் நீடிக்கிறார். 91.9 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி 11 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.