SuperTopAds

ஜெயலலிதா மரணத்தின் மர்மங்கள்!! -விசாரணை இறுதி அறிக்கை நாளை ஸ்டாலினிடம் கையளிப்பு-

ஆசிரியர் - Editor II
ஜெயலலிதா மரணத்தின் மர்மங்கள்!! -விசாரணை இறுதி அறிக்கை நாளை ஸ்டாலினிடம் கையளிப்பு-

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டர்.

முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை ஆரம்பித்த ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், பொலிஸ் அதிகாரிகள், அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலரை விசாரணை செய்தது. 

குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் மேலுமு; 6 மாதங்களுக்கு ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன் முதலாக நீட்டித்தது. அதன்பின் அடுத்தடுத்து ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது.

இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை சகிச்சிழமை காலை 10.30 மணி அளவில் கையளிக்கப்படவுள்ளது. இதில் உள்ள தகவல்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.