பதுங்குழி கொண்ட 8 மாளிகைகளை நிர்மாணிக்கும் வட கொரிய ஜனாதிபதி!! -எதிரிகளின் தாக்குதலில் இருந்து தப்ப புதிய வியூகம்-
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் அந்நாட்டின் தலைநகர் பியோங்யாங்கிலுள்ள தனது சங்கவங்ஸன் வளாகத்தில் 8 ஆடம்பர மாளிகைகளை நிர்மாணிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் தன்னை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த முயற்சிக்கும் எதிரிகளை தான் எங்கு நிலைகொண்டுள்ளளேன் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் திண்டாடச் செய்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர் மேற்படி மாளிகைகளை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாளிகைகளை நிர்மாணிக்கும் திட்டமானது வட கொரிய தலைமைத்துவம் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்பால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிம் ஜொங் உன் ஏற்கனவே மேற்படி தேவைப்பாட்டைக் கருத்திற் கொண்டு நாடெங்கும் 13 வசிப்பிடங்களை நிர்மாணித்துள்ளதாக அந்த அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
கிறிஸ்துவுக்கு முன் 221 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 26 வருடங்கள் சீனாவை ஆட்சி செய்த அந்நாட்டின் முதலாவது பேரரசர் கின் ஷி {ஹவாங் இலக்குவைக்கப்பட்ட தாக்குதல்களிலிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு இரவையும் வௌ;வேறு மாளிகைகளில் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகின்ற நிலையில் கிம் ஜொங் உன்னின் நடவடிக்கை அதனை நினைவுகூருவதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.