பாரம்பரிய சிறகுவலைப்பாடுகளை ஆக்கிரமித்து கடலட்டைப் பண்ணை! 200ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க சதி...

ஆசிரியர் - Editor I
பாரம்பரிய சிறகுவலைப்பாடுகளை ஆக்கிரமித்து கடலட்டைப் பண்ணை! 200ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க சதி...

கிளிநொச்சி - கிராஞ்சி பகுதியில் பரம்பரை பரம்பரையாக பேணப்படும் 200ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் சிறகுவலை பாடுகளை ஆக்கிரமித்து அவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழிக்கும் வகையில், மிகப்பெருமளவு பகுதி உள்ளடக்கிய பாரிய கடலட்டை பண்ணை அமைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தொியவருவதாவது, 

கிராஞ்சி - இலவங்குளம் பகுதியில் கடந்த 4 நாட்களாக பாரிய கடலட்டை பண்ணை அமைப்பதற்கு நாறா நிறுவனத்தினால் அளவீட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றது. மேற்படி அளவீட்டு பணிகள் இடம்பெறும் பகுதிக்குள் பரம்பரை.. பரம்பரையாக பேணப்படும் சிறகுவலை பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 3 நாட்களாக கரையோர பகுதியில் இடம்பெற்றுவந்த அளவீட்டு பணிகள் தற்போது 4வது நாளான இன்று கடலிலும் குறிப்பாக வலைகள் பாயப்பட்டுள்ள பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது எதிர்ப்பையும் தொிவித்திருக்கின்றனர். ஆனாலும் மேற்படி ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் பின்னால் பாரிய அட்டைப் பண்ணை முதலாளிகளும், 

உள்ளூரில் எந்தவிதமான தொழிலும் இல்லாமல் உள்ள சிலரும் இருப்பதாக கூறப்படுவதுடன், அவர்கள் இறங்குதுறையிலிருந்து வள்ளம் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாதைகளையும், இறங்குதுறையையும் கூட விட்டுவைக்கவில்லை என  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக 200ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையிலான இந்த கடலட்டை பண்ணை அமைக்கும் முயற்சியை பொறுப்புவாய்ந்தவர்கள் தடுத்து நிறுத்தவேண்டும். என பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு