சுதந்திர தினமன்று ரஷியா படை ஏவுகணை தாக்குதல் -உக்ரைன் ரயில் நிலையத்தில் 22 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
சுதந்திர தினமன்று ரஷியா படை ஏவுகணை தாக்குதல் -உக்ரைன் ரயில் நிலையத்தில் 22 பேர் பலி-

உக்ரைன் நாட்டின் சுதந்திர தினத்தில் ரயில் நிலையத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷிய போர் நேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இத்தருனத்தில் உக்ரைன் தனது 33 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியது. சோவியத் யூனியனிலிருந்து 1991 ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் பெற்றதை நேற்று  கொண்டாடியது.

இதையொட்டி ரஷியா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் என்றும், எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்கனவே எச்சரித்த இருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் உக்ரைனின் மத்திய டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் உள்ள சாப்லினோ நிலையத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு