SuperTopAds

நகருக்குள் புகுந்த கங்காருகள்!! -பொது மக்கள் மீது தாக்குதல்-

ஆசிரியர் - Editor II
நகருக்குள் புகுந்த கங்காருகள்!! -பொது மக்கள் மீது தாக்குதல்-

அவுஸ்திரேலியாவில் உள்ள நகரக் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் கங்காருள் புகுந்து அங்குள்ள பொது மக்களை தாக்குகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

குறிப்பாக அந்நாட்டின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் மாரூம் எனும் சிறிய நகரில் அண்மைக்காலமாக கங்காருகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். 

அங்குள்ள பூங்காக்கள் போன்ற இடங்களில் கங்காருகள் அதிகளவில் வருகின்றன. சிலவேளைகளில் மனிதர்களைக் கண்டால் அவர்களை கங்காருகள் தாக்குதல் நடத்துகின்றன. 

அண்மையில், காங்காரு நடத்திய தாக்குதலில் 67 வயதான பெண்ணொருவரின் கால் முறிந்துள்ளது. இந்நிலையில், மக்கள் மாலைவேளையில் நடைபயிற்சிக்கு செல்வதற்கோ மீன்பிடிக்கச் செல்வதற்கோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

காங்காருகளின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அங்குள்ள மக்கள் பொல்லுகளுடன் வீதிகளில் நடமாடித் திரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.