SuperTopAds

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் தர்ஜினி!!

ஆசிரியர் - Editor II
ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் தர்ஜினி!!

ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் நட்சத்திர வீராங்கனையும், ஆசியாவின் அதி உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார். 

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் (ஆசிய கிண்ணம்) போட்டிகள் சிங்கப்பூரில் செப்டெம்பர் 3 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. 11 நாடுகள் பங்குபற்றும் 13 ஆவது ஆசிய கிண்ண வலைபற்தாட்டப் போட்டி 4 குழுக்களில் லீக் முறையில் நடத்தப்படும்.

ஏ குழுவில் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய அணிகளும் பி குழுவில் சிங்கப்பூர், ஜப்பான், மாலைதீவுகள் ஆகிய அணிகளும் சி குழுவில் மலேசியா, புருணை, சைனீஸ் தாய்ப்பே ஆகிய அணிகளும் டி குழுவில் ஹொங்கொங், தாய்லாந்து ஆகிய அணிகளும் பங்குபற்றுகின்றன.

லீக் சுற்று முடிவில் 4 குழுக்களிலும் முதலிடங்களைப் பெறும் 4 அணிகள் பிரதான கிண்ணப் பிரிவில் மற்றொரு லீக் சுற்றில் விளையாடும். இந்த லீக் முடிவில் 1 ஆம் இடத்தை அடையும் அணியும் 4 ஆம் இடத்தை அணியும் ஓர் அரை இறுதியில் விளையாடும். 2 ஆம், 3 ஆம் இடங்களைப் பெறும் அணிகள் மற்றைய அரை இறுதியில் விளையாடும். 

வெற்றிபெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் விளையாடும். தொல்வி அடையும் அணிகள் 3 ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாடும்.

முதல் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் 2 ஆம் இடங்களைப் பெறும் அணிகளும் 3 ஆம் இடங்களைப் பெறும் அணிகளும் வௌ;வேறு குழுக்களில் போட்டியிட்டு பின்னர் நிரல் படுத்தல் போட்டிகளில் விளையாடும்.