யாழ் ராணி புகைரதத்தில் பயணச் சிட்டை பெறாமல் பயணித்த சிலர் சிக்கினர், மேலும் சிலர் பரிசோதகர்கள் வருவதை அறிந்து தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ் ராணி புகைரதத்தில் பயணச் சிட்டை பெறாமல் பயணித்த சிலர் சிக்கினர், மேலும் சிலர் பரிசோதகர்கள் வருவதை அறிந்து தப்பி ஓட்டம்..

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இடையில் சேவையில் ஈடுபடும் யாழ் ராணி புகைரதத்தில் இன்று காலை பயணம் செய்திருந்த பயணச் சீட்டு பெறாமல் சிலர் பயணித்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், பயணச் சீட்டு பரிசோதனையின்போது சிலர் புகைரதத்திலிருந்து குதித்து தப்பி சென்றுள்ளனர். 

குறித்த சேவைக்கு குறைந்தளவு கட்டணமே அறவிடப்படும் நிலையில் அதனையும் பெறாமல் சிலர் பயணித்துள்ளனர். இந்நிலையில் பயணச் சிட்டை பரிசோதகர்கள் இன்று சோதனை நடத்தியிருக்கின்றனர். இதன்போது சிலர் பயணச் சிட்டை பெறாமல் பயணிப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களிடம் பயணச் சிட்டைக்கான பணம் மற்றும் தண்டப்பணம் அறிவிடப்பட்டது, மேலும் 3ம் வகுப்பு பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு 2ம் வகுப்பில் பயணித்தவர்களும் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். அதேவேளை பயணச் சிட்டை பரிசோதகர்கள் வருவதை அறிந்த சிலர் பளை ரயில் நிலையத்திலேயே இறங்கி தப்பி ஓடியுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு