பெண் நீதிபதிக்கு அச்சுறுத்தல்!! -இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு-
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது தனது உதவியாளர கைது செய்யப்பட்டது குறித்து கண்டம் தெரிவித்தார்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும் அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் உரையை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.
இம்ரான்கான் உரையை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் வீதியில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.