SuperTopAds

பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்

ஆசிரியர் - Editor III
பயிற்சியினை திறம்படச் செயற்படுவதன் ஊடாக எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும்

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை  சேர்ந்த ஜொலி ஸ்டார்  விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு  இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் அன்பளிப்பாக இன்று  வழங்கி வைத்தார்.இவ்விளையாட்டு சீருடைகளை கண்ணன்வேல் , இ.வி.ராசா ,கர்ணா ,மற்றும்  ராஜ் ஆகியோரின் நிதி பங்களிப்புடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஒவ்வொருவருக்கும் பல திறமைகள் இருக்கின்றன ஆனால் அந்த திறமைகளை சரியாக இனங்கண்டு அவற்றை செயற்படுத்த இவ்வாறான ஊக்குவிப்பு செயற்பாடுகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.

நீங்கள் ஒவ்வொருவரும்  இவ்விளையாட்டு  துறையில்   சிறப்பாக வரவேண்டுமாக இருந்தால் உங்கள்  பயிற்சியினை திறம்படச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும்.அவ்வாறு செயற்படுவதன் ஊடாக உங்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடிவதுடன் பிரதேசத்தின் பெயரையும் சர்வதேசம் வரை எடுத்துச்செல்ல முடியும் என இணைந்த கரங்கள் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் லோகநாதன் கஜரூபன் இதன் போது குறிப்பிட்டார்.