SuperTopAds

மருத்துவரை தாக்கிய முதலமைச்சரின் மகள்!! -வைத்தியசாலையில் பரபரப்பு சம்பவம்-

ஆசிரியர் - Editor II
மருத்துவரை தாக்கிய முதலமைச்சரின் மகள்!! -வைத்தியசாலையில் பரபரப்பு சம்பவம்-

இந்தியாவின் - மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சர் ஜோரம்தங்கா வைத்தியசாலையில் வைத்து மருத்துவர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனது மகள் தாக்கும் காணொளியொன்று வைரலானதை அடுத்து, குறித்த முதலமைச்சர் ஜோரம்தங்கா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

முதலமைச்சரின் மகள் மிலாரி சாங்டே, மாநிலத் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள ஒரு வைத்தியசாலைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

எனினும், முன் அனுமதி இல்லாததால் குறித்த வைத்திய நிபுணர் அவரை சந்திக்க மறுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து கோபமடைந்த முதலமைச்சரின் மகள், மருத்துவரை நோக்கிச் சென்று தாக்கியுள்ளார். 

இதனை அங்கிருந்த ஒருவர் கைபேசியில் பதிவு செய்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு இந்த காணொளி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) மிசோரம் கிளை நேற்று போராட்டம் ஒன்றை நடத்தியதுடன், மருத்துவர்கள் கருப்புப் பட்டி அணிந்து பணிக்கு சமுகமளித்தனர்.

இறுதியில் முதல்வர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம்பக்கத்தில்தனது கையால் எழுதப்பட்ட குறிப்பொன்றை பதிவேற்றி, ஐஸ்வாலை சேர்ந்த தோல் மருத்துவரிடம் தனது மகள் தவறாக நடந்துகொண்டமைக்கு மன்னிப்பு கேட்பதாகவும், அவரது நடத்தையை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.