சுற்றுலா சென்றிருந்த இடத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த 27 வயதான பல்கலைகழக மாணவி பரிதாபகரமாக பலி!

ஆசிரியர் - Editor I
சுற்றுலா சென்றிருந்த இடத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த 27 வயதான பல்கலைகழக மாணவி பரிதாபகரமாக பலி!

சுற்றுலா சென்றிருந்த இடத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மாவனல்லை - உத்துவன்கந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுகொண்டு உதவி விவசாய ஆலோசகராக பணியாற்றிய வரும் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த 58 பேர் கொண்ட குழுவொன்று உத்துவன்கந்த பிரதேசத்திற்கு சுற்றுலாவிற்காக இன்று (22) சென்றிருந்தனர்.

இதன்போது விரஷ்மி கொடிதுவுக்கு என்ற 27 வயதுடைய யுவதி மலையில் ஏறும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.

படுகாயமடைந்த யுவதி மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு