நட்சத்திர ஹோட்டலில் நடந்த 3 திருமண நிகழ்வுகள், மணமக்கள் உட்பட 630 பேருக்கு திடீர் சுகயீனம்! தண்ணீர் தொட்டியில் அழுகிய பாம்பு, இலங்கையில் நடந்த சம்பவம்!

ஆசிரியர் - Editor I
நட்சத்திர ஹோட்டலில் நடந்த 3 திருமண நிகழ்வுகள், மணமக்கள் உட்பட 630 பேருக்கு திடீர் சுகயீனம்! தண்ணீர் தொட்டியில் அழுகிய பாம்பு, இலங்கையில் நடந்த சம்பவம்!

கண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற 3 திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த சுமார் 630 பேர் சுகயீனமடைந்துள்ள நிலையில், குறித்த நட்சத்திர விடுதியின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் காண்பட்ட பாம்பு இதற்கு காரணமாக இருக்கலாம். என சுகாதார பிரிவினர் சந்தேகிக்கின்றனர். 

3 திருமண நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், தொடர்ச்சியாக திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தவர்களும், திருமணம் முடிந்து தேன் நிலவுக்காக மலேசியா சென்றிருந்த ஒரு மணமக்களும் திடீர் சுகயீனமடைந்துள்ளனர். 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஆய்வுகளை நடாத்திய சுகாதார துறையினர் சுமார் 630 பேர் இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் தண்ணீரில் எற்பட்ட பிரச்சினை இதற்கு காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணைகளை நடாத்திய சுகாதாரத்துறையினர், 

குறித்த விடுதியின் பிரதான குடி தண்ணீர் தொட்டியை ஆராய்ந்தபோது அதன் உள்ளே அழுகிய நிலையில் பொிய பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தொட்டியிலிருந்து நீர் மாதிரிகளை சேகரித்துள்ள சுகாதாரத்துறையினர் பேராதனை பல்கலைகழக நீர்மாதிரிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மற்றும் ஆய்வுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. 

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு