10 குழந்தைகள் பெற்றால் 13 இலட்சம் பணப்பரிசு!! -ரஷிய ஜனாதிபதியின் உத்தரவால் பரபரப்பு-
ரஷிய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்ற நிலையில், அதிக குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு பெரும் தொகை பணப் பரிசுகள் வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி புதின் அறிவித்துள்ளார்.
அந்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றது. இது அந்த நாட்டின் ஜனாதிபதியை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்படும்.
அத்துடன் 10 ஆவது பிறந்த குழந்தைக்கு ஒரு வயது ஆனவுடன் ஒரு மில்லியன் ரூபா (சுமார் 13 இலட்சம் ரூபா) ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஜனாதிபதி புதின் அறிவித்துள்ளார்.