SuperTopAds

ஆளுநர் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்!!

ஆசிரியர் - Editor II
ஆளுநர் ஆகிறார் நடிகர் ரஜினிகாந்!!

தமிழ் திரையுலகின் சூப்பஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின் விரைந்து சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளமை பல்வேறு விதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியிருப்பது தற்போது விவாதமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். 

அந்த இலக்கின் ஒரு பகுதிதான் ஆளுநர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள். ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. 

பிரதமர் மோடி, ரஜினியை விரும்புவதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினியை தங்கள் பக்கம் இழுத்து சில பொதுக்கூட்டங்களில் பேச வைத்தாலே போதும் என்று கூட நினைக்கிறார்களாம்.

இதற்காக ரஜினிக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தயாராக உள்ளார்கள். தற்போது சில மாநிலங்களில் ஆளுநர் பதவி காலியாகவே உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை ஆளுநர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக அண்மையில் ஒரு வார இதழில் தகவல் வெளியாகி இருந்தது. டெல்லி வட்டாரத்தில் இது உறுதி செய்யப்படுகிறது.

தமிழக அரசியலைப் பொருத்தவரை ரஜினிக்கு மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லை. ஆதரிக்கும் மன நிலையில் இருந்த நடுநிலை மக்களும் இப்போது ரஜினியை கண்டு கொள்வதில்லை. என்றாலும் ரஜினியை முன்நிறுத்தி ஏதோ ஒரு அலையை உருவாக்க பாரதிய ஜனதாவில் சில மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.