வீட்டு சமையல் அறைக்குள் புகுந்து பெண்ணின் முகத்தில் மிளகாய் துாளை வீசிவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்ற திருடன்!

ஆசிரியர் - Editor I
வீட்டு சமையல் அறைக்குள் புகுந்து பெண்ணின் முகத்தில் மிளகாய் துாளை வீசிவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்ற திருடன்!

வீட்டு சமையலறைக்குள் நுழைந்து பெண்ணின் முகத்தில் மிளகாய் துாளை வீசிவிட்டு அவர் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க நகையை இனந்தொியாத நபர்கள் அறுத்துச் சென்றிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் (17) நேற்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை எறிந்துவிட்டு தங்க சங்கிலியை இனந்தெரியாத நபர் அபகிரித்துச் சென்றுள்ளார். இதன்போது பெண் கூச்சலிட அயலவர்களும் ஓடி வந்து திருடனை தேடியபோது அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலவாக்கலை பொலிஸார் குறித்த பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு சந்தேக நபரை தேடும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு