99 வயதில் 100 பூட்டப்பிள்ளைகளை கண்ட பெண்!!

ஆசிரியர் - Editor II
99 வயதில் 100 பூட்டப்பிள்ளைகளை கண்ட பெண்!!

அமெரிக்கா நாட்டின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்துவரும் 100 வயதை நெருங்கும் 99 வயதான மார்கரிட் கொல்லேர் எனும் பெண்ணொருவருக்கு 100 ஆவது பூட்டப்பிள்ளை பிறந்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் காலஞ்சென்ற கணவரின் நினைவாக வில்லியம் கொல்லேர் என அப்பூட்டப்பிள்ளைக்கு மார்கரிட் பெயரிட்டுள்ளார்.

1940களில் திருமணம் செய்த மார்கரிட் கொல்லேருக்கு 2 ஆம் உலக போரின் பின் முதலாவது குழந்தை பிறந்தது. தான் பெரியதொரு குடும்பத்தை உருவாக்க விரும்புவதை அப்போது தான் அறிந்திருந்தாக மார்கரிட் கூறுகிறார்.

மார்கரிட்- , வில்லியம்  கொல்லேர் தம்பதியினருக்கு 11 பிள்ளைகள் பிறந்தனர்.  20 வருட காலத்தில் இவர்கள் பிறந்தனர். இப்பிள்ளைகள் மூலம் 56 பேரப்பிள்ளைகள் பிறந்தனர்.

இப்போது 100 ஆவது பூட்டப்பிள்ளையும் பிறந்துள்ளது. தான் மிகவும் அதிஷ்டசாலி எனக் கருதுவதாக மார்கரிட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் எந்தவொரு முக்கிய நிகழ்விலும் மார்கரிட் தவறால் கலந்துகொள்வார் என அவரின் பேத்திகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு