மனிதச் சங்கிலி மூலம் இந்தியாவின் வரைபடம்!! -5,335 பேர் இணைந்து புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
மனிதச் சங்கிலி மூலம் இந்தியாவின் வரைபடம்!! -5,335 பேர் இணைந்து புதிய சாதனை-

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருட நிறைவை குறிக்கும் வகையில் நாட்டின் புவியியல் வரைபடத்தை மனிதச் சங்கிலி மூலம் உருவாக்கி புதிய சாதனைக்கு இந்தூர் உரிமைக்கோரியுள்ளது.

திவ்ய சக்திபீடத்தில் 'ஜ்வாலா' என்ற சமூக நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் 5000 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் ஒன்றிணைந்து இந்த வரைபடத்தை உருவாக்கினர்.

இந்திய வரைபடத்தில், எல்லையில் மட்டுமின்றி, அதற்குள்ளும் மனிதச் சங்கிலி அமைத்திருந்தோம். நாட்டின் வரைபடத்தின் எல்லைக் கோட்டில் மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது.

ஆனால் மூவர்ணக் கொடியையும் உருவாக்கி உள்ளே கூட்டிச் சென்றோம். நடுவில் அசோக் சக்ரம். இந்த நிகழ்வில் மொத்தம் 5,335 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

நாட்டின் பெண்களின் முக்கியத்துவத்தையும் வலிமையையும் காட்ட இந்திய வரைபடத்தின் எல்லையில் ஸ்ரீ சக்தி உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு