பல ஆண்களுடன் பாலியல் உறவுகொள்ள வற்புறுத்தல்!! -கணவனை கொலை செய்த மனைவி-
தனது கணவனை படுக்கையில் வைத்து சுட்டு கொலை செய்யுமாறு தானே கூறியதாக ஒப்புக்கொண்ட அமெரிக்கப் பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அந்நாட்டின் ஒக்லஹாமா மாநிலத்தில் வசித்து வந்த 3 பிள்ளைகளின் தாயான கிறிஸ்டி இவான்ஸ் (வயது 49) எனும் பெண்ணுக்கே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேறு பல ஆண்களுடன் கூட்டாக பாலியல் உறவில் ஈடுபடுமாறு தன்னை அடிக்கடி வர்புறுத்தியதால் கணவனை கொல்வதற்கு தான் தீர்மானித்ததாக குறித்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டி இவான்ஸும் சமயப் போதகரான அவரின் கணவர் டேவிட் இவான்ஸும் 3 தசாப்த காலமாக இணைந்து வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரின் அந்தரங்க வாழ்க்கை விபரீதமாக இருந்தது.
குறிப்பாக வேறு பல ஆண்களுடன் கூட்டாக பாலியல் உறவில் ஈடுபடுமாறு தனது கணவர் இவான்ஸ் தன்னை அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் கூட்டாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக 27 வயதான கலீல் ஸ்கொயரை கிறிஸ்டி இவான்ஸ் முதல் முறையாக கடந்த வருட முற்பகுதியில் சந்தித்துள்ளார்.
இதன் பின் கலீல் ஸ்கொய்ருக்கும் கிறிஸ்டி இவான்ஸுக்கும் இடையில் இரகசிய உறவு ஆரம்பமாகியது. 2021 மார்ச் 22 ஆம் திகதி தனது வீட்டில் டேவிட் இவான்ஸ் உறங்கிக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இக்கொலையைச் செய்துள்ளதாக முதலில் கிறிஸ்டி கூறினார். எனினும், இக்கொலைக்கு தானும் உடந்தை என்பதை கிறிஸ்டி பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கிறிஸ்டியும் கலீல் ஸ்கொயரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கிறிஸ்டி இவான்ஸுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஸ்டீவன் கேசிங்கர் தீர்ப்பளித்தார். 2060 ஆம் ஆண்டின் பின்னரே அவர் பிணையில் வெளிவருவற்கு தகுதி பெறுவார் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
வேறு பல ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு தன்னை நிர்ப்பந்தித்த கணவன், சில வேளைகளில் ஒரே நேரத்தில் பலருடன் பாலியல் உறவுகொள்ளுமாறு வர்புறுத்தியதாகவும் நீதிமன்றுக்கு கிறிஸ்டி இவான்ஸ் தெரியப்படுத்தியிருந்தார்.
மொத்தமாக 50 முதல் 100 ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாகவும் அவர் கூறினார். கிறிஸ்டி இவான்ஸ் தனது நடவடிக்கைக்கு பொறுப்பேற்பதாகவும், என்ன தண்டனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளார் எனவும் அவரின் சட்டத்தரணி ஜோய் மிஸ்கெல் கூறினார்.
அவர்களின் 29 வயதான மகள், 2 மகன்மாரில் ஒருவரும் தனது தந்தையின் துன்புறுத்தல்கள் குறித்து விபரித்தனர். தம்மை தந்தை தலையில் தாக்குவார் எனவும், தலைமுடியைப் பிடித்து தூக்குவார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமது தந்தையின் நடவடிக்கை குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த பின்னர், பிள்ளைகள் மூவரும் தாத்தா பாட்டியிடம் தங்கவைக்கப்படும் அளவுக்கு இத்துன்புறுத்தல்கள் மோசமாக இருந்தன எனவும் அவர்கள் கூறினர்.
கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலீல் ஸ்கொயரும் குற்றச்சாட்டை ஒப்புக்கொண் டுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.