இணையத்தில் கசிந்த தளபதியின் வாரிசு படக் காட்சி!!

ஆசிரியர் - Editor II
இணையத்தில் கசிந்த தளபதியின் வாரிசு படக் காட்சி!!

தளபதி விஜய் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின் 2 ஆம் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. 

இந்த நிலையில் தற்போது 3 ஆம் கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு தளபதி விஜய் நடிக்கும் சண்டை காட்சிகள் படமாகிறது. 

இந்த நேரத்தில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோ காட்சி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், உயிருக்கு போராடும் சரத்குமாரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. 

இந்த காட்சியில் தளபதி விஜய், பிரபு ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். இதை வைத்தியசாலையில் படமாக்கிக் கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் ரகசியமாக தனது கைபேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு