ஆங்சான் சூ கீக்கு மேலும் 6 வருட சிறைத்தண்டனை!!
பதவி விலக்கப்பட்ட மியன்மார் முன்னாள் தலைவர் ஆங்சான் சூ கீக்கு, நாட்டின் நீதிமன்றம் ஒன்று மேலும் ஆறு ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே தேசத்துரோகம் மற்றும் ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் 11 வருட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேலும் 6 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், மியன்மார் இராணுவம் அவரை பதவியில் இருந்து விலக்கி தடுத்து வைத்துள்ளது. மூடப்பட்ட கதவுகளின் பின்னால் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது ஊடகவியலாளருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து அரச காணிகளை மிகக்குறைந்த விலையில் விற்று அரச நிர்வாகத்திற்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தினார் என நீதிமன்ற இன்றைய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, சுகாதாரதுறை கட்டட நிர்மாணம், கல்வி நடவடிக்கைகளுக்கான வீட்டு நிர்மாண போன்ற பணிகளிலும் ஊழல் புரிந்தமை நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.