SuperTopAds

தூத்துக்குடியில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு..

ஆசிரியர் - Editor I
தூத்துக்குடியில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு..

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். தடியடி நடத்தியதால் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தினர். ஆத்திரமடைந்த மக்கள் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் காவல்துறை வாகனங்கள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ஆனால் ஒரு வாகனத்திற்கு வைக்கப்பட்ட தீ அணைக்கப்பட்டது. மற்றொரு வாகனம் கொழுந்து விட்டு எரிந்தது.

முன்னதாக நேற்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையடுத்து அம்மாவட்டத்தில் 25-ஆம் திகதிவரை 144 தடை உத்தரவு நீட்டித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அனைத்து தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.