ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு, போராட்டம் தொடர்கிறது..
தமிழகம்- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடைபெற்ற போராட்டத் தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள் ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பின்னர் 12 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந் து வெளியான செய்திகளின் படி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை காட்டிலும் அதிகம் என கூறப்படுகின்றது. இதேவேளை தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும்,
தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.