அடுத்த படத்திற்கு தயாராகும் லெஜண்ட் சரவணன்!!
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த 'தி லெஜண்ட் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 2500- க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. காதல், ஆக்ஷன், நகைச்சுவை நிறைந்த சமூக அக்கறையுள்ள படமாக இருக்க வேண்டும்.
அதுதான் பொது மக்களை ரசிக்கச் செய்யும் என்று இயக்குனரிடம் கோரிக்கை விடுத்து லெஜண்ட் சரவணன் கதை கேட்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.