ஸ்பெயினில் நயன் - விக்கி

ஆசிரியர் - Editor II
ஸ்பெயினில் நயன் - விக்கி

காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டு தேன் நிலவுக்காக தாய்லாந்து சென்றனர். 

அங்கிருந்து திரும்பிய இருவரும் அவரவர் பணியில் பிஸியாக இருந்தனர். நயன்தாரா ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் பங்கேற்றார்.

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் துவக்க மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை கலை நிகழ்ச்சிகளை முன்னின்று கவனித்து வந்தார். அவை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஓய்விற்காக ஸ்பெயின் சென்றுள்ளனர். ஸ்பெயினில் 10 நாட்கள் தங்குகின்றனர். பின்னர் சென்னை திரும்புகின்றனர். 

அட்லீ இயக்கும் ஜவான் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் இயக்கவிருக்கும் புதிய படத்தின் பணிகளைத் ஆரம்பிக்க உள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு