கனடாவில் இலங்கை தமிழ் மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு!!
கனடாவுக்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு தம்பதியின் மகளான ஆஷ்னா புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில், குறிப்பாக பெண்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஆஷ்னாவின் பாட்டியார் 1980 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளார். அவர் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், ஏற்கனவே ஒரு ஆசிரியையாக இருந்தும்கூட, கனடாவில் நிலையான ஒரு வேலையை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
மனத்திருப்தி இல்லாமல் ஏதேதோ வேலைகள் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது அவருக்கு. தனது பாட்டியின் கதையை பல முறை கேட்டிருந்த ஆஷ்னாவுக்கு, தானும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
தற்போது ளுநஉழனெ ர்நடிiபௌ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் ஆரம்பித்துள்ளார். அந்த அமைப்பு, புலம்பெயர்ந்த மற்றும் அகதிப் பெண்களுக்கு, அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உணவுப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட உதவுகிறது.
இத்தனைக்கும் ஆஷ்னா இன்னமும் கல்வி பயிலும் ஒரு மாணவிதான். அவர் ஹூரான் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி பயின்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.