SuperTopAds

'20 வருடங்களுக்கு பின் மீள இணையும் படையப்பா – நீலாம்பரி'

ஆசிரியர் - Editor II
'20 வருடங்களுக்கு பின் மீள இணையும் படையப்பா – நீலாம்பரி'

சூப்பஸ்ரார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதன் மூலம் இருவரும் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் ஒன்றாக நடிக்கவுள்ளனர். 

அண்ணாத்த படத்துக்கு பின்னர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் சூப்பஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பதை கடந்த பிப்ரவரி மாதமே உறுதி செய்து முதல் தோற்ற போஸ்டரையும் வெளியிட்டனர். 

அண்மையில் படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அறிவித்தனர் கதாநாயகியாக ஐஸ்வர்யாராய் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. 

சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று திரும்பிய சூப்பஸ்ரார் ரஜினிகாந்திடம் இதுகுறித்து கேட்டபோது அடுத்து ஜெயிலர் படத்தில் நடிக்க போகிறேன் என்றும் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தார். 

இந்த படத்தில் நடிக்க இருப்பதாக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இவர் வில்லன் வேடம் ஏற்கலாம் என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் சூப்பஸ்ரார் ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக ரம்யா கிருஷ்ணன் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். ரஜினியுடன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்து 1999 இல் வெளியான படையப்பா படம் பெரிய வரவேற்பை பெற்றது. 

2002 இல் வெளியான பாபா படத்திலும் சிறிய வேடத்தில் வந்தார். 20 வருடங்களுக்கு பின் மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.