இந்திய துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜக்தீப் தங்கர்!!
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் இன்று வியாழக்கிழமை காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 6 ஆம் திகதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக களமிறங்கிய ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ தலைவர் நட்டா, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இந்தியாவின் 14 ஆவது துணை ஜனாதிபதியாக ஜக்தீப் தங்கர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.