குரங்கு அம்மை நோய் அச்சம்!! -விஷம் வைத்து குரங்குகள் கொலை-
கொரோனவுக்கு அடுத்தபடியாக உலக நாடுட்டவர்களை அச்சுறத்தும் குரங்கு அம்மை நோய் பரவல் காரணமாக, பிரேசிலில் விஷம் வைத்து குரங்குகள் கொல்லப்படுவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் இந் நோய் 90 நாடுகளில் பரவில் சுமார் 29,000 பேரை பாதித்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் சர்வதேச சுகாதார நெருக்கடியை அறிவித்துள்ளது.
இந்த நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது ஆகும். இந்நிலையில் பிரேசிலில் குரங்கு அம்மை நோய் அச்சத்தால் குரங்குகள் அதிக அளவு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.
குரங்குகளிடம் இருந்து நோய் பரவுகிறது என்கிற தவறான எண்ணத்தில் பிரேசில் மக்கள் குரங்குகளை கொலை செய்து வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ரியோ டீ ஜெனிரோவில் கடந்த ஒரு வாரத்தில்
மட்டும் 10 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதே போன்ற சம்பவங்கள் நாட்டின் பிற நகரங்களிலும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே குரங்கு அம்மை நோய் பீதியால் குரங்குகள் கொல்லப்படுவது குறித்து உலக சுகாதார அமைப்பு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.