SuperTopAds

சுதந்திர தினத்தில் குண்டு தாக்குதல் நடத்த திட்டம்!! -ஐ.எஸ் பயங்கரவாதி இந்தியாவில் கைது-

ஆசிரியர் - Editor II
சுதந்திர தினத்தில் குண்டு தாக்குதல் நடத்த திட்டம்!! -ஐ.எஸ் பயங்கரவாதி இந்தியாவில் கைது-

இந்திய சுதந்திர தினத்தில் அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படிக் கைது சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, சபாஉதீன் ஆஸ்மி என்ற திலாவர் கான் (பைரம் கான், அசார் என்ற பெயராலும் அழைக்கப்பட்டு உள்ளார்) என அந்நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். 

அவர் ஆசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் நகரில் அமிலோ என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தொடர்பில் பிரசாரம் செய்து வந்ததுடன், அந்த இயக்கத்தில் இணையும்படி மக்களை ஈர்க்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவரை கைது செய்து, பின்னர் லக்னோவில் உள்ள தலைமையகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரது கைபேசி குறித்து நடத்திய சோதனையில், நாட்டில் பயங்கரவாத மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட முஸ்லிம் இளைஞர்களை வசீகரிக்கும் நோக்கிலான, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சமூக ஊடகத்துடனும் ஆஸ்மி தொடர்பில் இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.