4 கோடி கேட்கும் ராஷ்மிகா!!

ஆசிரியர் - Editor II
4 கோடி கேட்கும் ராஷ்மிகா!!

தமிழில் சினிமாத்துறையில் காத்தியின் சுல்தான் படத்திற்கு அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றார். 

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் படங்களில் நடிக்க தனது சம்பளத்தை ராஷ்மிகா உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே புஷ்பா படத்தில் நடிக்க ஒரு கோடி ரூபா வாங்கிய அவர் தற்போது புஷ்பா 2 ஆம் பாகத்தில் நடிக்க 4 கோடி ரூபா சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அந்த தொகையை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ராஷ்மிகா இந்தி படங்களில் நடிப்பதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட் படங்களில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள இயக்குனர்கள் குழப்பத்தில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு