உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள், வீடியோக்கள்!! -தாமாக அனுப்பி வைக்கும் அந்நாட்டு பெண்கள்-
உக்ரைன் நாட்டின் பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையே 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இப் போரில் உக்ரைன் இராணுவம் வீரத்துடன் போராடி வருகிறது.
உக்ரைன் பெண்கள் புதினின் இராணுவத்துடன் போரிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக கூறப்படுகிறது.
இராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆதாரங்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பெண்கள் ரஷிய இராணுவத்துடன் சண்டையிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கவர்ச்சியான படங்களை அனுப்புகிறார்கள். இதற்காக டெலிகிராம் என்ற சமூக வலைதளத்தில் ஒரு சேனல் உருவாக்கப்பட்டு அதில் பெண்களின் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
உக்ரைனின் தலைநகரான கிவிவில் இருக்கும் ஒரு குழுவால் இவை அனைத்தையும் செய்ய்யப்படுகிறது. அந்த குழுவில், நாட்டின் மூலை முடுக்கிலிருந்து இதுபோன்ற பெண்களின் படங்களும் வீடியோக்களும் வந்து கொண்டிருக்கின்றன.
அதன் பிறகு, அது எடுக்கப்பட்டு வீரர்களின் மொபைல் அல்லது பிற சாதனங்களுக்கு மாற்றப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், இது சில காலமாக நடந்து வந்தது, தற்போது தெரியவந்துள்ளது.
இருப்பினும், இது குறித்து உக்ரைனுக்குள் கலவையான விமர்சனங்கள் உள்ளது. தற்போது அதிமாகானபேர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.