தேசிய போட்டியில் 3 தங்க பதக்கங்கள்!! -யாழ் இளைஞரின் புதிய சாதனை-

ஆசிரியர் - Editor II
தேசிய போட்டியில் 3 தங்க பதக்கங்கள்!! -யாழ் இளைஞரின் புதிய சாதனை-

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் கடந்த 6 ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் யாழ்.மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு 3  பிரிவுகளில் நடைபெற்ற 3 போட்டியிலும் வென்று 3 தங்க பதக்கங்களை வெற்றி கொண்டார்.

120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான ளஙரயவ பிரிவில் கலந்து கொண்ட அவர்  330 கிலோ கிராமையும், டிநnஉரிசநளள பிரிவில் 175 கிலோ கிராமையும் பிரிவில் 261 கிலோ கிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.

இதில் னநயனடகைவ மற்றும் ளஙரயவ பிரிவில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். அத்துடன் குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோ கிராமை தூக்கி புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு